கொழும்பு
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை ஆகியவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எதுவும் பலன் தரவில்லை. அங்கு நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது.ஆனால் மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரியுள்ளது இலங்கை. பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், தற்போது கடனை திரும்பி தர இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.