உலகம், போர்

அமெரிக்கா: உக்ரேன் போரை இழுத்தடிக்க ரஷ்யா ஆயத்தம்

உக்­ரேன் போரை இழுத்­த­டிக்க ரஷ்ய அதிபர் புட்­டின் ஆயத்­த­மாகி வரு­வ­தாக அமெ­ரிக்க வேவுத் துறை தெரி­விக்­கிறது.

உக்­ரே­னின் டான்­பாஸ் வட்­டா­ரத்­தோடு போரை அவர் நிறுத்­தி­வி­ட­மாட்­டார் என்றும் உக்­ரே­னில் மோல்­டொவா பகு­தி­யில் உள்ள ரஷ்யக் கட்­டுப்­பாட்டு வட்­டா­ரத்­திற்குத் தரைப்­பா­லம் ஒன்றை அமைக்க புட்­டின் உறு­தி­பூண்டு இருக்கிறார் என்றும் அமெ­ரிக்க வேவுத் துறைத் தலை­வர் அவ்­ரில் ஹானிஸ் கூறி­னார்.

உக்­ரே­னுக்­கான மேற்­கத்­திய ஆத­ரவை அறவே ஒழித்­து­க்கட்ட தன்­னு­டைய முழு நாட்­டை­யும் திரட்டி புட்­டின் பாடு­ப­டு­வார். இந்த முயற்­சி­யில் ராணுவ சட்­டத்­தை­யும் அவர் விட்­டு­வைக்கமாட்­டார் என்று அமெ­ரிக்க வேவுத் துறை கணிக்­கிறது.

டான்­பாஸ் என்ற உக்­ரே­னின் கிழக்கு வட்­டா­ரத்­தில் ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்­து­வது என்ற புட்­டி­னின் முடிவு தற்­கா­லி­க­மா­ன­து­தான் என்று அமெ­ரிக்க வேவுத் துறை கரு­து­கிறது. கருங்­க­டல் துறை­முகப் பகு­தி­களை வெல்ல வேண்டும் என்­றும் ரஷ்யப் படை­கள் விரும்­பு­கின்­றன.

2014ல் மாஸ்கோ சேர்த்­து­க்கொண்ட கிரி­மி­யா­வுக்குத் தண்­ணீர் வளத்தை உறு­திப்­படுத்த புட்­டின் விரும்­பு­கி­றார் என்­றும் அமெ­ரிக்க செனட் சபை ராணுவச் சேவை குழு­வி­டம் உரை­யாற்­றி­ய­போது அமெரிக்க வேவுத் துறைத் தலைவர் கூறினார்.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்து கிட்­டத்­தட்ட மூன்று மாதங்­கள் ஓடி­விட்­டன. ரஷ்­யா­வுக்கு எதிர்­பார்த்த வெற்றி கிடைக்­க­வில்லை. இருந்­தா­லும் டான்­பாஸ் வட்­டா­ரத்தை முழு கட்­டுப்­பாட்­டுக்­குள் ரஷ்யா கொண்­டு­வந்­து­வி­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் தலை­தூக்கி வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், உக்­ரே­னுக்கு மேலும் US$40 பில்­லி­யன் உத­வியை அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றம் செவ்­வாய்க்­கி­ழமை அங்கீ­ கரித்­தது. அதே­வே­ளை­யில், உக்­ரே­னில் கார்­கிவ் நக­ரின் வடக்­குப் பகு­தி­யில் தாக்கு­தல் நடத்­திய ரஷ்யப் படை­களைப் பின்­வாங்க வைத்து அந்த நக­ரைச் சுற்றி உள்ள பல கிரா­மங்­களை மீண்­டும் தாங்­கள் கைப்­பற்­றி­விட்­ட­தாக உக்­ரே­னியப் படை­கள் நேற்று தெரி­வித்­தன.

இந்­நி­லை­யில், சுவீ­டன், பின்­லாந்து நாடு­க­ளுக்­குச் சென்று உக்­ரேன் போர் பற்றி பிரிட்­டன் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் விவா­திப்­பார் என்­றும் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

உக்­ரே­னில் மரி­ய­போல் நக­ரில் இருக்கும் அஸோஸ்­டால் எஃகு ஆலையை நேற்று ரஷ்யப் படை­கள் தொடர்ந்து தாக்­கியதாக வும் ஒடெசா துறை­முக நக­ரும் தாக்­கப்­பட்­ட­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­தன.

இவ்­வே­ளை­யில், உக்­ரேன் போர் கார­ண­மாக அந்த நாட்­டை­விட்டு ஓடிய மக்­க­ளின் எண்­ணிக்கை ஏற்­கெ­னவே மதிப்­பி­டப்­பட்­ட­தை­விட அதி­கம் என்று ஐநா கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *