இலங்கை, உலகம், ஊழல்

அரசியலைவிட்டு ராஜபக்சே குடும்பம் வெளியேற இலங்கை மக்களில் பத்தில் ஒன்பது பேர் விருப்பம்

இலங்­கைப் பிர­த­மர் பத­வி­யில் இருந்து மகிந்த ராஜ­பக்சே விலக வேண்­டும் என்­றும் ராஜ­பக்சே குடும்­பத்­தி­னர் அர­சி­ய­லை­விட்டு வெளி­யேற வேண்­டும் என்­றும் இலங்கை மக்­களில் பத்­தில் ஒன்­பது பேர் கருத்­து­ரைத்­துள்­ள­னர்.

மாற்­றுக் கொள்­கை­க­ளுக்­கான மையத்­தின் கருத்­தாய்­வுப் பிரிவு மேற்­கொண்ட ஜன­நா­யக ஆளுகை நம்­ப­கத்­தன்­மைக் குறி­யீடு இரண்­டாம் கட்ட ஆய்­வில், அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே பதவி விலக வேண்­டும் என்ற கோரிக்­கைக்கு 87 விழுக்­காட்­டி­னர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

“ஆகை­யால், நாட்­டில் இப்­போது நில­வும் நெருக்­க­டி­யைத் தீர்ப்­ப­தில் ராஜ­பக்சே குடும்­பத்­தி­ன­ருக்­குப் பங்­கில்லை என்­றும் அவர்­களை வெளி­யேற்­று­வதே இப்­போ­தைய நெருக்­க­டி­யி­லி­ருந்து வெளி­யே­று­வதற்­கான வழி என்­றும் மக்­கள் நம்பு­வதை இந்­தக் கருத்­தாய்வு தெளி­வாக உணர்த்­து­வ­தாக மாற்­றுக் கொள்­கை­க­ளுக்­கான மையம் கூறி­யி­ருக்­கிறது.

மூன்று ஆண்­டு­க­ளுக்­கு­முன் ராஜ­பக்­சேக்­க­ளுக்கு அதிக அள­வில் வாக்­க­ளித்து பெரும்­பான்மை சிங்­கள இனத்­த­வர் உட்­பட அனைத்து இனத்­த­வர்­களும் இதே கண்­ணோட்­டத்­தைக் கொண்­டி­ருப்­பதை முக்­கி­ய­மா­கப் பார்க்க வேண்­டும் என்று அந்த மையம் குறிப்­பிட்­டது.

“இப்­போ­தைய நெருக்­க­டி­யில் இருந்து விடு­ப­டும்­வரை வல்­லு­நர்­கு­ழு­வைக் கொண்டு நாட்டை நிர்­வகிப்­பது, அதி­ப­ருக்­கான செயல் அதி­கா­ரங்­க­ளைத் திரும்­பப்­பெ­று­வது, அனைத்­துக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அடங்­கிய இடைக்­கால அரசை அமைப்­பது, அர­சி­யலமைப்­பின் 20வது சட்­டத்­தி­ருத்­தத்தை ரத்து செய்து, 19வது சட்­டத்­தி­ருத்­தத்­திற்கு ஒப்­பான ஒன்றைக் கொண்­டு­வ­ரு­வது ஆகிய மற்ற கோரிக்­கை­க­ளுக்­கும் பொது­மக்­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர்,” என்று அம்­மை­யம் கூறி இருக்கிறது.

இருப்­பி­னும், நாடா­ளு­மன்­றத்­தின் 225 உறுப்­பி­னர்­களும் ஒட்­டு­மொத்­த­மா­கப் பதவி விலக வேண்­டும் எனும் கோரிக்கை தொடர்­பில் மக்­கள் கவ­ன­மாக இருப்­ப­தா­கத் தெரி­கிறது. அக்­கோ­ரிக்­கைக்கு 56% இலங்கை மக்­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

பெரும்­பான்­மையை நிரூ­பிப்போம்: எதிர்க்கட்சியினர் உறுதி

இந்­நி­லை­யில், அர­சாங்­கத்­திற்கு எதி­ராக அடுத்த வாரம் நாடா­ளு­மன்­றத்­தில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின்­போது பெரும்­பான்­மையை நிரூ­பிப்­போம் என்று எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்­கள் சக்­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லக்­‌ஷ்­மண் கிரி­யல்ல தெரி­வித்­துள்­ளார்.

புதிய பிர­த­மர் தலை­மை­யில் இடைக்­கால அரசு அமைப்­ப­தற்­குக் குறைந்­தது 113 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு இருப்­பதை நிரூ­பித்­துக்­காட்­டு­மாறு எதிர்க்­கட்சி­களை அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

அத்­து­டன், அதி­பர் கோத்­த­பாய மீதும் நாடா­ளு­மன்­றத்­தில் குற்­றம் சுமத்தி, அவ­ரைப் பத­வி­நீக்­கம் செய்ய முயல்­வோம் என்று ஐக்­கிய மக்­கள் சக்­தி­யின் இன்­னொரு எம்.பி. முஜி­புர் ரகு­மான் சொன்­னார்.

சுதந்­திர தினம் கொண்­டாட ரூ.95 மில்­லி­யன் செலவு

இத­னி­டையே, நாடு பெரும் பொரு­ளி­யல் நெருக்­க­டியை எதிர்­கொண்டு­வ­ரும் வேளை­யில், 74வது சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்­திற்கு 95 மில்­லி­யன் ரூபாயை இலங்கை அர­சாங்­கம் செல­விட்­டது தக­வ­ல­றி­யும் உரி­மைச் சட்­டத்­தின்­மூ­லம் தெரிய வந்­துள்­ளது.

சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்­திற்­கா­கக் கடந்த ஆண்­டு­களில் செல­வி­டப்­பட்ட தொகை­யில் இதுவே ஆக அதி­கம் என்று ‘சிலோன் டுடே’ செய்தி கூறி­யது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *