ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிப் மற்றும் குண்டுஸ் நகரங்களில் நடந்த தனித்தனி வெடிப்புகளில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். வடக்கு ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிப் நகரில் உள்ள ஷியா மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்றொரு வடக்கு ஆப்கானிய நகரமான குண்டூஸில் மற்றொரு குண்டுவெடிப்பில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் என மாகாண சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின் போது இந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. இரண்டு நாட்களுக்குப் பிறகு மேற்கு காபூலில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹசாரா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில், குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் “ஷியா மசூதிக்குள் குண்டுவெடிப்பு நடந்தது,” என்று மசார்-இ-ஷெரீப்பில் உள்ள தலிபான் தளபதியின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசேரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு; இம்ரான் கட்சியின் அனைத்து எம்பிக்களும் ராஜினாமா

மாகாண சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியா ஜெண்டானி, குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 32 பேர் காயமடைந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினரான ஷியா பிரிவு இஸ்லாமிய சமூகம், இஸ்லாமிக் ஸ்டேட் உள்ளிட்ட சன்னி தீவிரவாத குழுக்களால் அடிக்கடி தாக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் குண்டூஸின் மாகாண குண்டுவெடிப்புகான காரணம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மஸார்-ஈ-ஷ்ரீபில் வசிக்கும் ஒருவர், அருகில் உள்ள சந்தையில் தனது சகோதரியுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது, ​​பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும், மசூதியைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து புகை எழுவதைக் கண்டதாகவும் கூறினார்.

“கடைகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது, அது மிகவும் நெரிசலான பகுதி, எல்லோரும் பீதியில் ஓடத் தொடங்கினர்,” என்று பெயர் வெளியிட மறுத்த பெண் ஒருவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்கள் ஆகஸ்ட் மாதம் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து நாட்டைப் சிறப்பாக ஆக்குவோம் எனக் கூறினர். ஆனால் சர்வதேச அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் தீவிரவாத தாக்குதல்கள் வன்முறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர் . ஐஎஸ் பயங்கரவாத குழு பல தாக்குதல்களை நடத்தி வருகிறது.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *