இந்தியா, தமிழ்நாடு, வர்த்தகம்

இது தப்பு! கர்நாடகாவை வில்லனாக்கி.. எங்க முதலீட்டை பறிக்காதீங்க! தமிழ்நாடு பற்றி பொம்மை பரபர பேச்சு!

சென்னை: மத விவகாரங்களை காரணம் காட்டி கர்நாடகாவின் முதலீடுகளை தமிழ்நாடு தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தட்டி பறிப்பதை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சனம் செய்துள்ளார். கர்நாடகாவில் நிலவி வரும் மத ரீதியான பிரச்சனைகள் காரணமாக அங்கு பொருளாதார ரீதியான பாதிப்புகள் ஏற்படும் சூழல் உண்டாகி உள்ளது.

அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உடுப்பில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது. இங்கு எல்லா வருடமும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடை போட்டு வந்தனர். இது இந்த முறை தடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து சர்ச்சை! உகாதி கொண்டாட்டத்தின் போது… இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்! பரபரக்கும் கர்நாடகா பிரச்சாரம் மேல் பிரச்சாரம் இந்த நிலையில்தான் அங்கு வழிபாட்டு தலங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு மசூதிகள் கடுமையாக குறி வைக்கப்பட்டு வருகின்றன. இது போக இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கர்நாடகாவில் ஹலால் பொருட்களை வாங்க கூடாது என்றும் இந்துக்கள் இடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. வெளியேற்றம் இதனால் பெங்களூரில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழல், கலவரம் வெடிக்கும் சூழல் இருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு (முக்கியமாக ஓசூர்), தெலுங்கானா போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாநிலங்களும் கர்நாடகாவில் இருந்து முதலீடுகளை தமிழ்நாடு திருப்ப முயன்று வருகிறார். தெலுங்கானா அமைச்சர் கே ராமா ராவ் நேரடியாக கர்நாடகாவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பு அதேபோல் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் கர்நாடகாவில் நடக்கும் விஷயங்களை கவனித்து வருகிறோம். அங்கிருந்து தொழில்துறை நிறுவனங்கள் வெளியேற விரும்பினால், அவர்களை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். பொதுவாக அண்டை மாநிலம் செல்லும் முதலீடுகளை கூடுதல் ஆபர் கொடுத்து வேறு மாநிலங்கள் தட்டி பறிப்பது வழக்கமாக நடக்கும் மார்கெட் போட்டிதான். ஆனால் இதை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சனம் செய்துள்ளார். விமர்சனம் இது தொடர்பாக அவர் வைத்துள்ள விமர்சனத்தில், பெங்களூரையும், கர்நாடகாவை வேறு மாநிலங்களோடு ஒப்பிட முடியாது. நாம் ஏற்கனவே வளர்ந்துவிட்டோம். அவர்கள் இப்போதுதான் வளர்ந்து வருகிறார்கள். தமிழ்நாடு தெலுங்கானா மாநிலங்கள் நம் மாநில முதலீட்டை பறிப்பது தவறானது. அது தங்களுக்கு முதலீடு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் செய்வது. எங்கள் மாநிலம் நன்றாக இருக்கிறது முதலீடு செய்ய வாருங்கள் என்று கூறுவதே சரி. தவறு அதை விடுத்து அண்டை மாநிலம் நன்றாக இல்லை என்று கூறி.. கர்நாடகாவை வில்லனாக்கி அதன் மூலம் தங்கள் மாநிலத்திற்கு முதலீட்டை கொண்டு வருவது சரியல்ல. தமிழ்நாடு, தெலுங்கானாவில் முதலீடு செய்தவர்களை நான் எங்கள் மாநிலத்திற்கு அழைக்கவில்லை. எங்கள் பலம் எங்களுக்கு தெரியும். அவர்கள் மாநிலத்திற்கு யாரும் முதஹலீடு செய்ய வரவில்லை. அதனால் எங்கள் மாநிலத்தில் உள்ளவர்களை அவர்கள் அழைக்கிறார்கள். முன்னேற்றம் கர்நாடகா அவர்கள் எவ்வளவு வீக் என்பதை இது காட்டுகிறது. தமிழ்நாடு, தெலுங்கானா முன்னேற முயன்றால் தானாக முன்னேற்றட்டும். நாங்கள் அதை எதிர்க்கவில்லை. அதற்காக எங்களை வில்லனாக்க வேண்டாம். அது தவறு. பெங்களூர் ஏற்கனவே முன்னேறிய நகரம். நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறோம், என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *