உக்ரைன் ரஷ்யா போரினால் உலக சந்தையில் கோதுமை, சோளம் மற்றும் தாவர எண்ணெய் ஆகிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா போரானது 76வது நாளாக தொடரும் நிலையில், உக்ரைனின் முக்கிய ஏற்றுமதியின் துறைமுகமான கருங்கடல் துறைமுகத்தை ரஷ்ய ராணுவ கடற்படை வழிமறித்து சிறைப்பிடித்துள்ளது.

இந்தநிலையில், கருங்கடல் துறைமுகத்தை ரஷ்ய ராணுவ கடற்படை சிறைப்பிடித்து இருப்பதன் முலம் உலகின் உணவு வழங்களை ரஷ்யா அச்சுறுத்துகிறது என உக்ரைனின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா போர்: உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தட்டுபாடு

உக்ரைன் போரால் உலக அளவில் எற்பட்டுள்ள உணவு தட்டுபாடு மற்றும் விலையேற்றம்:
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்குவதற்கு முன்பு வரை, இருநாடுகளும் இணைந்து கிட்டதட்ட 28.9 சதவிகித கோதுமை ஏற்றுமதியும், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் முக்கிய சேர்ப்பு பொருளான சூரியகாந்தி பொருள்களின் ஏற்றுமதியில் 60 சதவிகித்தையும் கொண்டு இருந்தனர்.

ஆனால் தற்போது இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த போர் நடவடிக்கைகளால், உலக அளவில் கிட்டதட்ட 37 சதவிகிதம் உணவு பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.

உக்ரைன்-ரஷ்யா போர்: உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தட்டுபாடு

அத்துடன் மில்லியன் கணக்கான குடும்பங்களை ஏழ்மையில் தள்ளியதுடன் ஊட்டசத்து குறைபாட்டையும் உலக அளவில் இந்த போரானது தூண்டியுள்ளது.

மேலும் லட்சக்கணக்கான குடும்பங்களை குறைவான அல்லது உணவு உட்கொள்ளாத நிலைக்கு தள்ளியுள்ளது.

போரினால் ஏற்பட்டுள்ள உலகலாவிய எதிர்வினைகள்:
அதிகரித்துள்ள உணவு மற்றும் ஏரிப்பொருள் விலையேற்றத்தால் ஆப்பிரிக்காவில் முன்னோடியில்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுவருகிறது என்று ஐ.நா எச்சரித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் போரினால் மேலும் வலுவடைந்த இலங்கை பொருளாதார நெருக்கடி, பொதுமக்கள் உணவு பொருள்கள் வாங்க திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டு வன்முறை வெடிக்கும் நிலை வரை கொண்டு சென்றுள்ளது.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *