டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். டெல்லி அரசுப் பள்ளி மற்றும் கிளினிக்கைப் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ் முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்று இருக்கிறார். நேற்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இதில் அவரிடம் நீட் தேர்வு விலக்கு உட்பட 14 கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வைத்தார்.
அதோடு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். டெல்லியில் ஏப்ரல் 2-ம் தேதி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் நடக்க உள்ளது. திமுக சார்பாக திறக்கப்படும் இந்த கட்டிட விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று இருக்கிறார். நீட் தேர்வு தொடர்பான பிரச்சினையை அழுத்தமாக பதிவு செய்தேன்.. முதல்வர் ஸ்டாலின் அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்டாலின் இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
அரசுப்பள்ளி, இலவச கிளினிக் திட்டதை கெஜ்ரிவாலுடன் சேர்ந்து இருவரும் பார்வையிட்டனர். மேற்கு வினோத் நகரில் இருக்கும் ராஜ்கிய சர்வோதய கன்யா வித்யாலயாவில் முதல்வர் ஸ்டாலின், கெஜ்ரிவால் இருவரும் பார்வையிட்டனர். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இந்த சந்திப்பில் உடன் இருந்தார். இந்த நிலையில் டெல்லி சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க இருக்கிறார். மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுக்க உள்ளார்.. மேலும் ஜுன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுக்க உள்ளார். ஸ்டாலின் பள்ளி டெல்லியில் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. அங்கு அரசு பள்ளிகள் உலகத்தரத்தில் உள்ளது.
இதேபோன்று தமிழ்நாட்டிலும் மாற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அங்கு ஆய்வு செய்தார். பள்ளிக்குள் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் ரோஜா கொடுத்த உற்சாகமாக வரவேற்றனர். மேலும் டெல்லியின் மின்சார திட்டங்களை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் இன்று கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நிர்மலா சீதாராமன் ஸ்டாலின் டெல்லி சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்..மேலும் ஜுன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார் கெஜ்ரிவால் ஸ்டாலின் மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசுப்பள்ளி, இலவச கிளினிக் திட்டதை கெஜ்ரிவாலுடன் சேர்ந்து பார்வையிடுகிறார். டெல்லியில் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. அங்கு அரசு பள்ளிகள் உலகத்தரத்தில் உள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டிலும் மாற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய இருக்கிறார். மேலும் டெல்லியின் மின்சார திட்டங்களை பற்றியும் அவர் கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஸ்டாலின் ஜிஎஸ்டி நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் 14 கோரிக்கைகளை வைத்தார். அதில் ஜிஎஸ்டி தொடர்பான கோரிக்கையும் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அது தொடர்பான கோரிக்கைகளை வைத்தார். அதேபோல் ஜிஎஸ்டி நிலுவை தொகையை கொடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்