விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து அட்டவணை வெளியீடு: தொடக்க ஆட்டத்தில் செனகல்-நெதர்லாந்து மோதல்

தோகா,

32 அணிகள் இடையிலான 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை கத்தாரில் 8 இடங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் நாளில் 4 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

இதன்படி நவம்பர் 21-ந்தேதி ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் செனகல்- நெதர்லாந்து, கத்தார்-ஈகுவடார், ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து-ஈரான், அமெரிக்கா-தகுதி சுற்று அணி ஆகிய அணிகள் மோதுகின்றன.

‘நம்பர் ஒன்’ அணியும், 5 முறை உலக சாம்பியனுமான பிரேசில் தனது தொடக்க ஆட்டத்தில் செர்பியாவை (ஜி பிரிவு) நவம்பர் 24-ந்தேதியும், அர்ஜென்டினா அணி சவுதி அரேபியாவை (சி பிரிவு) நவ.22-ந்தேதியும், முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி ஜப்பானை (இ பிரிவு) நவ.23-ந்தேதியும் எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *