கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?

கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் தக்காளி விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி கோயம்பேடு மார்கெட்டில் மொத்த விலையில் இரண்டாம் ரகம் தக்காளி (ஒரு கிலோ) 50 ரூபாய் என்றும், முதல் ரகம் தக்காளி (ஒரு கிலோ) 60 ரூபாய் என்றும் விற்கப்படுகிறது. சில்லறைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் கோயம்பேடு சந்தைக்கு 60 லிருந்து 70 வாகனங்களில் டன் கணக்குகளில் தக்காளிகள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், கடந்த வாரத்தில் பெய்த மழையின் காரணமாகவும் பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் தக்காளி வரத்து குறைந்து வந்தது. இவற்றுடன் உற்பத்தி குறைவும் ஏற்பட்டதால், சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியில் தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்து விலை உயர்ந்து காணப்பட்டது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published.