கொழும்பு: இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் தெற்காசியாவில் இருக்கும் பல்வேறு நாடுகள் சீனாவை பார்த்து தெறித்து ஓட தொடங்கி உள்ளன. எங்கே சீனா தங்களுக்கும் கடன் கொடுத்து சிக்கலை உண்டாக்குமோ என்ற அச்சம் தெற்காசிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் இந்தியாவிற்கு வந்திருந்தார். இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேசிய போது அதிகாரபூர்வமற்ற முறையில் அவர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில், சீனா எங்களுக்கு கடன் கொடுக்க முயன்றது.
அதற்கு நீங்கள் எங்களுக்கு பொருளாதார உதவிகளை வேண்டுமானால் செய்யுங்கள். ஆனால் கடன் வேண்டாம், என்று கூறிவிட்டேன், என்று நேபாள பிரதமர் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான தேசிய ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டு இருந்தன.
சீனா
அதாவது சீனாவிடம் கடன் வாங்கும் எண்ணம் இல்லை. சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்ட முதலீடுகள் எங்களுக்கு வேண்டாம் என்று நேபாள அரசு சீனாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சீனாவிடம் கடன் வாங்கினால் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்பதை உணர்ந்து நேபாளம் இப்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது . பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் மூலம் உலகம் முழுக்க பல நாடுகளில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை சீனா முன்னெடுத்து வருகிறது.
தெற்காசியா நிலை
முக்கியமாக தெற்காசியாவில் இருக்கும் சின்ன சின்ன நாடுகளில் சீனா அதீத கடன் கொடுத்து பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. பின்னர் அந்த நாட்டிற்கு கூடுதல் வட்டி போட்டுவிட்டு, அந்த நாடுகளை கடனில் மூழ்க வைத்து கடைசியில் அந்த நாட்டில் நினைத்ததை சாதித்துக்கொள்ளும் வழக்கத்தை சீனா வைத்துள்ளது. இதற்கு சீனா வைத்து இருக்கும் வசீகரமான பெயர்தான் “debt trap diplomacy”. பிளான் சீனாவின் “debt trap diplomacy” காரணமாக பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாண்டினீக்ரோவின் சாலை திட்டத்தால் அந்த நாடே கடனில் மூழ்கியது. சீனாவின் Export-Import Bank மூலம் 200 மில்லியன் டாலரை உகாண்டா கடனாக வாங்கி தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை இப்போதும் செலுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது. அதேபோல் குட்டி நாடான லாவோஸ் சீனாவிடம் வாங்கிய 1.2 பில்லியன் டாலர் கடனை அடைக்க முடியாமல் திணறி வருகிறது.
இரண்டு நாடுகள் என்ன?
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகள்தான் சீனா மற்றும் பாகிஸ்தான். இதில் பாகிஸ்தான் சீனாவிடம் பல்வேறு திட்டங்களுக்காக 385 பில்லியன் டாலர் கடன் வாங்கியது. தற்போது வட்டி மேல் வட்டி போட்டு பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிந்துள்ளது. இந்த கடனால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. . அங்கு சில்லறை பணவீக்கம் 12.2 சதவிகிதமாகவும்., மொத்த பணவீக்கம் 23.6 சதவிகிதமாகவும் உள்ளது. பாகிஸ்தானின் மொத்த கடன் 50 டிரில்லியனை கடந்துள்ளது.
பாகிஸ்தான் நிலை
பாகிஸ்தானில் தற்போது கடுமையான உணவு தட்டுப்பாடு உள்ளது. அங்கு பார்லி, கோதுமையும் ஏப்ரல் வரை மட்டுமே கையிருப்பில் இருக்கும். உற்பத்தி உடனே தொடங்கப்படவில்லை என்றால் அந்நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும். அதேபோல் காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. சீனாவிடம் பாகிஸ்தான் வாங்கிய கடன் முழுக்க முழுக்க சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் கீழ் கட்டப்படும் சாலைகள், துறைமுகங்கள், பாலங்களுக்காக வாங்கப்பட்ட கடன். இதுதான் அங்கு பொருளாதாரம் சரிய காரணம். ஆனால் இதை அடைக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. கடந்த வருடம் மட்டும் 26 பில்லியன் ரூபாய் வட்டி மட்டும் கொடுத்துள்ளது.
இம்ரான் கான் ஆட்சி
பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக புரட்சி வெடிக்க இதுவே காரணம். இலங்கையிலும் இதுதான் நடந்தது. இலங்கையில் மீண்டும் ராஜபக்சே குடும்பம் எழுச்சி பெற சீனாவின் ஆதரவுதான் காரணம் என்றும் கூறப்பட்டது. ராஜபக்சே குடும்பமும் சீனாவிற்கு இதற்காக தனது கதவுகளை திறந்துவிட்டது. இந்தியாவிற்கு அருகே குட்டி தீவு ஒன்றை கூட சீனாவிற்கு ராஜபக்சே குடும்பம் தாரை வார்த்தது. தற்போது அதே ராஜபக்சே குடும்பம் சீனாவிடம் இலங்கை வாங்கிய கடனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடன்
பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் கடன் வாங்கிய காரணத்தால்தான் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. தற்போது அந்த நாட்டிடம் அந்நிய செலாவணிக்கு டாலர் இல்லாத அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவில் மட்டும் சீனா கொடுத்துள்ள கடன் 40 பில்லியன் டாலரை கடந்துள்ளது. பாகிஸ்தானின் 10 சதவிகித கடனை சீனாவிடம்தான், இலங்கையின் 6 சதவிகித கடன் சீனவிடம்தான். இலங்கை மோசம் ஐஎம்எப் உதவியை இரண்டு முறை கேட்கும் நிலைக்கு இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 260 ரூபாய் வரை தொட்டுள்ளது. டீசல் விலை 210 ரூபாய் வரை தொட்டுள்ளது. லங்கையில் 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 297.99 ஆக உயர்ந்து உள்ளது. இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் மொத்த கோபமும் ராஜபக்சே குடும்பம் மீது திரும்பி உள்ளது. இதற்கு பின் உள்ள பல காரணங்களில் ராஜபக்சே – சீனா இடையிலான உறவும் முக்கிய காரணம் ஆகும். சீனா திட்டம் இதனால்தான் தற்போது சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் வேண்டாம் என்று சொல்லும் முடிவிற்கு நேபாளம்வந்துள்ளது . ஒரு காலத்தில் சீனாவுடன் மிக நெருக்கமாக இருந்த நேபாளம்தான் இந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல் மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய நாடுகளும் இதே எண்ணத்தில் இருக்கிறதாம். இலங்கை, பாகிஸ்தானுக்கு நேர்ந்த கதி நமக்கும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் இந்த குட்டி தேசங்கள் உள்ளதாம் hindustan times நிறுவனம் கட்டுரை வெளியிட்டுள்ளது.