தமிழ்நாடு, போராட்டம்

சொத்துவரி உயர்வு சாதாரண விஷயமல்ல! தேவையில்லா வேலை! சென்னை ஆர்ப்பாட்டத்தில் கொதித்த பாஜக எம்எல்ஏக்கள்

சொத்து வரி உயர்வு தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி ஆகியோர் உட்பட அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நயினார் நாகேந்திரன் அப்போது பேசிய பாஜக மாநில துணைத் தலைவரும் பாஜக சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பது சாதாரண விஷயமல்ல எனக் கூறினார். சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி பாஜக வெளிநடப்பு செய்தும் திமுக அரசு இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

மக்களுக்கு பாதிப்பு

மேலும், ஏற்கனவே கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது தான் அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் சொத்து வரி உயர்வு தேவையற்ற ஒன்று எனக் கூறினார். மத்திய அரசு சொல்லித்தான் சொத்து வரியை உயர்த்தியதாக தமிழக அரசு தவறான தகவலை பரப்பி வருவதாகவும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு மத்திய அரசு 24% அதிக நிதியை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் நலன்

பொதுமக்கள் நலன் கருதி சொத்துவரி உயர்வை முதலமைச்சர் ஸ்டாலின் வாபஸ் பெற வேண்டும் என்றும் மக்கள் அரசு என்று கூறிக்கொண்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத அரசாக இருந்து வருவதாகவும் பாஜக ஆர்ப்பாட்ட மேடையில் விமர்சிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *