அரசியல், தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “பாஜக ஆட்சிக்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றுபட வேண்டும்”

பாஜக ஆட்சிக்கு எதிராக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மாநில கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக, ‘தினமணி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியில், மூன்று நாட்கள் பயணமாக டெல்லி வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்துள்ள பேட்டியில், “தேசிய அரசியலில் திமுக எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிரதமர், குடியரசுத் தலைவராக யார் இருக்க வேண்டும் என தேர்வு செய்வதில் திமுக முக்கியக் கட்சியாக உள்ளது. நாடாளுமன்றத்திலும் திமுக மூன்றாவது பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது.

மாநில அரசியலுக்கும் தேசிய அரசியலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மாநில அரசியலை ஒருங்கிணைத்தது தான் தேசிய அரசியல். ஆகையால் இரண்டையும் பிரிக்கக் கூடாது.

பாஜகவுக்கு எதிராகவுள்ள அனைத்து மாநில கட்சிகளும் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதுபோன்ற மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை ஓரம் கட்டியுள்ளன.

தேர்தல் நேரத்தில் மட்டும் கூட்டணி அமைக்காமல், தமிழகத்தில் கொள்கைக் கூட்டணி அமைத்து தேர்தலில் இடங்களைப் பங்கிட்டு சந்திப்பதுவே எங்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் இலங்கையில் அவசரநிலை பிரகடனம்
கோவை அருகே 2 மாதங்களில் 9 யானைகளின் உயிரிழப்பு – காரணம் என்ன? பதறவைக்கும் படங்கள்
அம்பேத்கரின் உறுதிப்பாட்டால் உருவான இந்திய ரிசர்வ் வங்கி – வரலாறு
இதேபோல், காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளுடன் தேசிய அளவில் நட்புறவை மேம்படுத்த வேண்டும். இதற்காக அனைத்து மாநிலங்களிலும் குழுக்களை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை வலியுறுத்துகிறேன்” என்று ஸ்டாலின் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *