இலங்கை, பொருளாதாரம்

பட்டினி.. கொடுமை.. மொத்த நாடும் ஒரு குடும்பத்தின் கையில்.. ராஜபக்சேக்கள் மீது இலங்கை மக்கள் ஆத்திரம்

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அந்நாட்டின் பெரும்பாலான துறைகளை கட்டுப்படுத்தி வரும் ராஜபக்சே குடும்பத்தின் மீது இலங்கை பொது மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். மொத்தமாக இவர்கள் எல்லோரும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. 1948க்கு பின் இலங்கையில் நிலவும் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் உணவிற்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐஎம்எப் உதவியை இரண்டு முறை கேட்கும் நிலைக்கு இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 260 ரூபாய் வரை தொட்டுள்ளது. டீசல் விலை 210 ரூபாய் வரை தொட்டுள்ளது. தமிழர், முஸ்லிமுக்காக நான் பேசவில்லை, இன்று எனக்காக பேச எவரும் இல்லை -இலங்கை போராட்டத்தில் ஒரு பதாகை இலங்கை பொருளாதாரம் அங்கு தற்போது 13 மணி நேர மின்சார தடை அமலில் உள்ளது.

இலங்கையில் 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 297.99 ஆக உயர்ந்து உள்ளது. இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் மொத்த கோபமும் ராஜபக்சே குடும்பம் மீது திரும்பி உள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு கூட அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு வெளியே 2000க்கும் அதிகமான மக்கள் கூடி போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இலங்கையில் தற்போது அவசர நிலையும், 36 மணி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் இலங்கையின் மொத்த அதிகாரத்தையும் கிட்டத்தட்ட ராஜபக்சே குடும்பம்தான் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. பொதுவாக அதிபருக்கு ஒரு சந்தேகம் என்றால்.. அவர் பிரதமரிடம் கேட்பார்.. அவர் தனது அமைச்சர்களிடம் கேட்பார்.. அமைச்சர்கள் தங்களின் உதவியாளர்களிடம் கேட்பார்கள். இதில் பல துறை வல்லுனர்கள் இருப்பார்கள்.. ஆனால் இலங்கையிலோ.. இந்த அத்தனை பேருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்! பங்காளிகளிடம் அறிவுரை கேட்டுதான் அங்கு எல்லா முடிவும் எடுக்கப்படுகிறது. ராஜபக்சே குடும்பம் ஆம் இலங்கையின் அதிபர், பிரதமர், அமைச்சர்கள், பிரதமரின் chief of staff எனப்படும் முதன்மை செயலாளர் வரை பலரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி, அப்பா, மகன்கள்தான்.

கடந்த வருடம் ஜூலை மாதம் 8ம் தேதி அங்கு 70 வயது நிரம்பிய பசில் ரோஹன் ராஜபக்சே நிதி அமைச்சராக பதவி ஏற்றார். இவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர். அதற்கு முன்பே 78 வயது நிரம்பிய சமல் ராஜபக்சே அங்கு நீர் வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் . அமைச்சர்கள் அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு ராஜபக்சே குடும்பத்தில் மூத்த அண்ணன் இவர்தான். இது போக ஏற்கனவே மஹிந்த ராஜபக்சே பிரதமராகவும், கோத்தபய ராஜபக்சே அதிபராகவும் அங்கே பதவி வகித்து வருகிறார். இரண்டு பேருக்கும் வயது தலா 75 மற்றும் 72 ஆகும். இது போக 35 வயது ஆன, நாமல் ராஜபக்சே அங்கு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். இவர் மகிந்தாவின் மகன். மகன்கள் இது போக சமல் ராஜபக்சேவின் மகன் ஷாஷீன்ரா ராஜபக்சே அங்கு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவருக்காக புதிய அமைச்சரவை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெயரே மிக நீளமான ஒன்று. “State Minister of Organic Fertilizer Production, Supply and Regulation and the Paddy and Grains, Organic Food, Vegetables, Fruits, Chillies, Onion and Potato Cultivation Promotion, Seed Production and Advanced Technology for Agriculture” என்பதுதான் இவர் வகிக்கும் அமைச்சரவை பொறுப்பின் பெயர் ஆகும்.

மஹிந்த இது போக மஹிந்த ராஜபக்சேவின் சகோதரியான காந்தினி ராஜபக்சேவின் மகன் நிபுணர் ராஜபக்சே அங்கு எம்பியாக இருக்கிறார். அதோடு மஹிந்தவின் இன்னொரு மகன் யோஷித்தா ராஜபக்சே பிரதமருக்கு (தனது அப்பா) ஆலோசனை வழங்கும் பிரதமர் அலுவலக செயலாளராக இருக்கிறார். அங்கு ராஜபக்சே குடும்பம்தான் முக்கியமான 9 பதவிகளை வகித்து வருகிறது.

இதில் அதிபர் கோத்தபயவிற்கு ஏற்றபடி கடந்த சில மாதங்கள் முன் சட்டமும் திருத்தம் செய்யப்பட்டது. அதிபர் பவர் அதன்படி அங்கு அதிபர் தனக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தலாம், அதிபர் தனக்கு என்று அமைச்சரவை பொறுப்புகளை ஏற்கலாம், புதிய துறையை உருவாக்கலாம், அமைச்சர்களை, பிரதமர்களை கேள்வி கேட்காமல் நீக்கலாம் என்ற பல சுதந்திரங்கள் இந்த சட்ட திருத்தம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் நாட்டின் மொத்த கட்டுப்பாடும் ராஜபக்சேவின் குடும்பத்தின் கையில்தான் உள்ளது. கடந்த 20 வருடங்களில் பெரும்பாலான வருடங்கள் ராஜபக்சே குடும்பம்தான் இலங்கையை கட்டுப்படுத்தி வந்துள்ளது. பிரதமர் யார்? ஆனால் இந்த முறை மிக தீவிரமாக மொத்த இலங்கையையும் ராஜபக்சே குடும்பம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதில் மஹிந்த போன்றவர்கள் 2004, மற்றும் 2005 -2015 வரை இலங்கையில் அதிபராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. வயதான ராஜபக்சேக்கள் தற்போது தங்களின் வாரிசுகளான நமல் போன்றவர்களை களத்தில் இறக்கி எதிர்கால அதிகாரத்திற்கு தயார்படுத்திவிட்டனர். நமல் அதிபர் இதில் நமல்தான் எதிர்கால அதிபர் என்று இப்போதே கணிப்புகள் தெரிவிக்க தொடங்கிவிட்டன. இதற்கு ஏற்றபடி இவரும் அரசின் முன்னெடுப்புகள் அனைத்திலும் முன்னிலை வகித்து வருகிறார்.

இலங்கையின் பொருளாதாரம் இப்போது மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக களமிறங்கி உள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்க ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்று கூறி இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பின்னர் அது மறுக்கப்பட்டது.. 2.19 கோடி மக்களின் விமர்சனத்திற்கும்.. போராட்டத்திற்கும்.. சாபத்திற்கும் ஒரு குடும்பம் ஆளாகி உள்ளது. ஒரு காலத்தில் உள்நாட்டு போரில் இருந்து இலங்கையை காத்த ” சூப்பர் ஹீரோ” குடும்பமாக சிங்கள மக்கள் இடையே பாராட்டப்பட்ட அதே குடும்பம்தான் இப்போது அதே சிங்கள மக்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *