இந்தியா, இலங்கை, பொருளாதாரம்

பலர் வரப்போறாங்க! பிரதமர் மீட்டிங்கிலேயே சுட்டிக்காட்டிய முதல்வர்! சொன்ன மாதிரியே நடக்குதே! பின்னணி!

டெல்லி: இலங்கையில் நிலவும் பொருளாதார நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கடந்த வாரம் பேசினார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன சில விஷயங்கள் அப்படியே நடக்க தொடங்கி உள்ளன. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு அமைச்சரவை மொத்தமாக ராஜினாமா செய்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நிலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் மக்கள் சாலையில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை பொருளாதாரத்தை ‘தூக்கி நிறுத்த’ போகும் இரு தமிழர்கள்.. யார் இவர்கள்? இலங்கை போராட்டம் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பும் 315 ரூபாயை தாண்டி உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது இலங்கையில் இருந்து பொருளாதார நிலை காரணமாக மக்கள் வெளியேறி வருகிறார்கள். இந்த முறை தமிழர்கள் என்று இல்லாமல் சிங்களர்களும் இலங்கையில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டிற்குள் வர முயன்றது. அவர்களை கடலோர காவல் படையினர் பிடித்து கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிங்களர்கள் வெளியேற்றம்

அதன்பின் மேலும் 10 இலங்கை அகதிகள் படகுடன் தனுஷ்கோடிக்கு வந்தனர். இவர்களுக்கும் உணவு, உடை, பால், போர்வை கொடுக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்தான் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசினார். கடந்த வாரம் பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் 14 கோரிக்கைகளை வைத்தார். அகதிகள் இதில் இலங்கை பொருளாதார பிரச்சனை, அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனை பற்றி பேசினார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து அகதிகள் தமிழ்நாட்டிற்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கூட 16 தமிழர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தனர். முதல்வர் ஸ்டாலின் இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நிலை காரணமாக அவர்கள் தமிழ்நாடு வந்தனர். அங்கு உணவு கூட வாங்க முடியாத நிலை அவர்களுக்கு நிலவுகிறது. இவர்கள் கடல்வழியாக மண்டபத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தற்காலிக இருப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் இதேபோல் தமிழ்நாட்டிற்கு வரும் நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய தயாராக உள்ளது, என்று குறிப்பிட்டார்.

மேலும் அகதிகள் அதாவது இலங்கையில் இருந்து மேலும் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியபடியே தமிழ்நாட்டிற்கு மேலும் அகதிகள் வர தொடங்கி உள்ளனர். இலங்கையில் இருந்து கடல் வழியாக தனுஷ்கோடிக்கு அகதிகள் நேற்று இரவு வந்துள்ளனர். 2 குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் கப்பல் மூலம் இவர்கள் தனுஷ் கோடி வந்துள்ளனர். உணவு வழங்கப்பட்டது இவர்களுக்கும் உணவு, உடை, பால், போர்வை கொடுக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தபடியே தமிழ்நாட்டிற்கு அகதிகள் வருகை அதிகரித்துள்ளது. முன்னதாக வடக்கு இலங்கையில் இருக்கும் தமிழர்கள், கொழும்பில் இருக்கும் தமிழர்கள், மலையக தமிழர்கள் ஆகியோருக்கு நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். பொருளாதார நெருக்கடியால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உணவுகள், மருந்துகளை அனுப்ப நாங்கள் தயார் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *