அரசியல், இலங்கை

பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினிமா செய்ததாக பரவிய செய்தி தவறு- இலங்கை அரசு விளக்கம்

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரம் மோசமான நிலையை சந்தித்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களுக்கு இலங்கை வெளிநாடுகளை நம்பி, அங்கிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனை மேற்கொள்ள போதுமான பணம் டாலரில் இல்லாததால், பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களை கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது.

எரிபொருட்கள் பற்றாக்குறையால் தினமும் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முன்தினம் இரவு முற்றுகையிட்டனர். பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டன.

இலங்கையில் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சமூகவலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- ஊரடங்கை மீறி தொடரும் போராட்டம்

அதனையடுத்து, எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இந்தநிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ராஜபக்ச அளித்த ராஜினாமா கடிதத்தை கோட்டபயா ஏற்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில், இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகள் தவறானது அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *