உங்களில் யாராவது புதிதாக கார் வாங்கத் திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது. நாடு முழுவதும் இப்போது பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்திருக்கும் நிலையில், கார் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் வாகன தயாரிப்புக்கான உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பால் அவ்வப்போது இதுபோல வாகனங்களின் விலையை உயர்த்துவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்த ஏப்ரல் மாதம் முதல் வாகனங்களின் விலையை உயர்த்த மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிறகு, நீங்கள் முன்பை விட அதிகம் செலவு செய்து கார் வாங்க வேண்டியிருக்கும். இந்த விலையேற்றத்தால் பொதுமக்களின் பட்ஜெட்டில் கூடுதல் சுமை ஏற்படும். அதோடு, வாங்கும் சம்பளத்திலும் கூடுதல் செலவு ஏற்படும்.
இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் பங்குச் சந்தையில் அளித்துள்ள தகவலில், கடந்த ஓராண்டாக நிறுவனத்தின் வாகன உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அதன் சுமையை வாடிக்கையாளர்களின் மீது சுமத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
விலை உயர்வு என்பது வெவ்வேறு மாடல்களுக்கு வெவ்வேறு அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்பது குறித்து எந்த தகவலையும் இந்நிறுவனம் வெளியிடவில்லை. வாகனங்களின் விலை சுமார் 8.8 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
மாருதி சுஸுகி கார்களின் விலை:
எர்டிகா: ரூ.8.13 லட்சம் – ரூ.10.86 லட்சம்
விட்டாரா பிரெஸ்ஸா: ரூ.7.69 லட்சம் – ரூ.11.18 லட்சம்
ஆல்டோ 800: ரூ.3.25 லட்சம் – ரூ.4.95 லட்சம்
டிசையர்: ரூ.6.09 லட்சம் – ரூ.9.13 லட்சம்
பலேனோ: ரூ.6.35 லட்சம் – ரூ.9.49 லட்சம்