இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி மஸ்சிமோ போசியோ, இத்தாலி விஞ்ஞானி டொமாசோ போர்னசியாரி ஆகியோர் இணைந்து, பொய் எழுதினால் அதை கண்டுபிடிக்கும் சாப்ட்வேரை கண்டுபிடித்துள்ளனர். ஒரு பத்தியில் ஒரு குறிப்பிட்ட வார்த்தை எத்தனை தடவை இடம்பெற்றுள்ளது என்பதை கண்டறியும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சாப்ட்வேர் திறம்பட செயல்படுகிறதா என்பதை அறிய, இத்தாலி கோர்ட்டுகளில் சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் அளித்த வாக்குமூலங்களை படித்துப் பார்க்கும் பணியில் சாப்ட்வேர் ஈடுபடுத்தப்பட்டது. அதில், வாக்குமூலத்தில் எந்தெந்த இடத்தில் பொய் சொல்லப்பட்டுள்ளது என்பதை சாப்ட்வேர் கண்டுபிடித்தது. இது, 75 சதவீதம் துல்லியமாக செயல்படுமாம்.
இதுபோல், ஆன்லைனில் இடம்பெறும் புத்தக விமர்சனங்கள், ஓட்டல்கள் பற்றிய விவரங்களிலும் பொய்யை கண்டுபிடித்து விடுமாம். எனவே, ஆன்லைன் புத்தக விமர்சனங்களை அதன் ஆய்வுக்கு உட்படுத்தும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
தினத்தந்தி