அரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ அல்லது பள்ளி மாணவர்களைப் பற்றியோ இவர்கள் ஒருபோதும் கவலைகொள்ளப் போவதில்லை. டாஸ்மாக்கை பொறுத்தவரை, மக்கள் ஆற்றாது அழுது புலம்பினாலும், எத்தனை எதிர்ப்புகள் தெரிவித்தாலும், கண்டனக் கணைகளை தொடுத்தாலும் அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு ஓசைதான். தமிழக மக்களின் இன்றியமையாத எத்தனையோ பிரச்னைகளில் ஒத்து போகாமல் வட துருவம் தென் துருவம் போல் எதிரும் புதிருமாக உள்ள இரு திராவிட கட்சிகளும், டாஸ்மாக் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் இருவரும் ஒத்துப்போவது தமிழகத்தின் சாபக்கேடு என்றுதான் கூற வேண்டும்.
மதுவினால் வாழ்பவர்கள் யார் ?
21
Jun