உலகம், மருத்துவம்

மறுபடியும் முதல்ல இருந்தா.. சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா! தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா?

உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட்டு வரும் நிலையில், சீனாவில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அங்கிருந்து அனைத்து நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அலறவிட்டது. கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கிய பின்னரே, நாட்டில் வைரஸ் பரவல் மெல்லக் குறையத் தொடங்கியது. இப்போது தான் உலக நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன.

தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல.. விரும்பினால் செலுத்திக் கொள்ளலாம்.. தமிழக அரசு கொரோனா இருந்த போதிலும், இதுவரை எந்தவொரு நாடும் கொரோனா பாதிப்பை முழுமையாக ஒழித்துவிடவில்லை. ஆல்பா, பீட்டா, டெல்டா என கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், கொரோனா வைரஸ் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடைசியில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் உலகெங்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது தான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. சீனா கடந்த 2 ஆண்டுகளாகவே வைரஸ் பாதிப்பை மிகச் சிறப்பாகக் கையாண்ட சீனாவில் இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

சீனாவில் கடந்த சில நாட்களில் மட்டும் 13,000க்கும் அதிகமான நபர்களுக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜீரோ கோவிட் திட்டத்தைச் சீனா பின்பற்றுவதால், அங்கு பல்வேறு நகரங்களில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்க ஓமிக்ரான் வகை கொரோனாவே முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது. புதிய வகை இந்நிலையில், சீனாவில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஷாங்காய் நகரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் சில கொரோனா நோயாளிகளிடம் ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு புதிய வகை ஓமிக்ரான் வைரசாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதனை ஓமிக்ரான் BA.1.1 என்று ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தி உள்ளனர். இது ஓமிக்ரான் கொரோனா போலவே தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது.

சீன அரசு கடந்த சனிக்கிழமை மட்டும் சீனாவில் 12,000க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் பல இடங்களில் மெகா டெஸ்டிங் மேற்கொள்ளவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல கொரோனா உறுதி செய்யப்படும் நபர்களைக் கட்டாயம் தனிமைப்படுத்தும் முறையையும் சீன அரசு பின்பற்றி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *