வர்த்தகம்

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 07. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 216 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 136 விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறகத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4859 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4842 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 17 உயர்ந்துள்ளது.

அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,736-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 136 உயர்ந்து ரூ.38,872-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 69.70-க்கு விற்பனையான நிலையில் இன்று 0.30 காசுகள் அதிகரித்து ரூ. 71.00-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *