வர்த்தகம்

மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது. இந்த நிலையில், நேற்று விலை குறைந்து மக்களை மகிழ்வித்த தங்கம் இன்று காலை விலை உயர்ந்தது. எனினும், இன்று வர்த்தகத்தில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது.

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 136 குறைந்து ரூ.39,568-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ. 4946-ல் விற்பனையில் உள்ளது.

முன்னதாக, இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ. 4,969 ஆக இருந்தது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 48 உயர்ந்து 39,752 ரூபாய்க்கு விற்பனையானது.

மேலும் படிக்க | Gold Rate: இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம், இல்லத்தரசிகள் ஹேப்பி, விலை என்ன தெரியுமா

வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி வெள்ளி ஒரு கிராம் ரூ. 73.00-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 73000-க்கும் விற்பனையில் உள்ளது.

முன்னதாக, இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி 73.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 73,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.

தேசிய அளவில் தங்கத்தின் விலை பற்றி பல ஊகங்கள் உள்ளன. எனினும், உலகெங்கிலும் உள்ள பல பொருளாதார நிபுணர்கள், தங்கத்தின் மீது நேர்மறையான அணுகுமுறையையே கொண்டுள்ளனர். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோரது ஆர்வத்தை இது அதிகரித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் போரால், பல வித அத்தியாவசிய பொருட்களோடு கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையும் அதிகமாக உயர்ந்தது. இதன் தாக்கம் அனைத்து நாடுகளைப் போல இந்தியாவிலும் காணப்பட்கின்றது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சற்று நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *