பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு யாரிடமும் கெஞ்ச மாட்டோம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் துவாரில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியது: எந்த பிரச்சினையுமின்றி மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும்.
மக்களவைத் துணைத் தலை வர் தம்பிதுரை, பாஜகவை ஏன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் என்று தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் பேசிவிடக்கூடாது. தம்பிதுரை, பாஜகவை விமர்சனம் செய்வதற்கு பின்புலம் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால் அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல லாம். கூட்டணிக்காக யாரிடமும் பாஜக கெஞ்சாது என்றார்.