திருச்சி: மத்திய மண்டலத்தில் கஞ்சா, குட்கா தொடா்பாக சுமாா் 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூ.2 கோடி மதிப்பிலான 1,800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூா் எஸ்.ஆா்.எம். கல்விக்குழும வளாகத்தில், போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். சினிமா தொடங்கும் முன் கஞ்சா ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் – முதல்வர் மு.க ஸ்டாலின் அப்போது பேசிய அவர், “போதை பழக்கத்தால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் இழப்பு ஏற்படுகிறது.
போதை பழக்கத்துக்கு அடிமையானால் குற்ற உணா்வு என்பதே இருக்காது. இதுவே குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம். போதைப் பழக்கங்களால் மகிழ்ச்சியையும் சுய மரியாதையையும் இழக்க நேரிடும்.” என்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுபடி போதைப்பொருள் தடுப்பு குறித்து தனிப்படை அமைத்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
போதைப்பொருள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வகையில் விரைவில் செல்போன் செயலி தொடங்கப்படும். திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரு ஆண்டில் கஞ்சா, குட்கா தொடா்பாக சுமாா் 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான 1,800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.