இந்தியா, பொருளாதாரம்

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி.! பெட்ரோல் – டீசல் குறைய வாய்ப்பு இல்லை.!!

ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிந்ததும் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 110ஐ தாண்டிவிட்டது.

டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.104.61 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.87 ஆகவும் அதிகரித்து உள்ளது. மும்பையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே லிட்டருக்கு ரூ.119.67 மற்றும் ரூ.103.92 அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கடந்த 15 நாட்களுக்கு முன் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

இந்த 15 நாட்களில் 2 நாட்கள் தவிர மற்ற 13 நாட்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் விற்கும் மெட்ரோ நகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை 120 ரூபாயை நெருங்குகிறது. அங்கு பெட்ரோல் விலை 84 பைசாவும், டீசல் விலை 85 பைசாவும் உயர்த்தப்பட்டது.

மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 119.67 க்கு விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 103.92 க்கு விற்கப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூ.110.09-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.100.18-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு :

ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிந்ததும் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 110ஐ தாண்டிவிட்டது. உக்ரைன் ரஷ்யா போரும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி இருந்தது.

இனிமேல் விலை குறையுமா ? 

அதற்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலையும் நாடு முழுக்க குறைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் முடிந்து முடிவுகள் வரும்வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 99 டாலர் என்ற அளவில் குறைந்தும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *