சமீபகாலமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் அணிவது குறித்து 2021 – ம் ஆண்டு யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்
சமீபத்தில் இஸ்ரேலின் சுற்றுலாத்தலமான எய்லட்டில் நடைபெற்ற 2021 மிஸ் யுனிவர்ஸுக்கான போட்டியில், ஹர்னாஸ் கவுர் சாந்து “மிஸ் யுனிவர்ஸ்” பட்டம் வென்றார். பஞ்சாப்பை சேர்ந்த இவர் 21 வயதான இளம் பெண்.
கடந்த 2017 ஆம் ஆண்டு டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் பேக் மூலம் மடலிங்கை துவங்கிய பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். முன்னதாக மிஸ் இந்தியா, பஞ்சாப் 2019 பட்டங்களை அவர் பெற்றுள்ளார்.
அதோடு பஞ்சாப் மொழி படங்களில் நடித்துள்ளார். யுனிவர்ஸ் போட்டியில் முதல் மூன்று சுற்றுகளின் ஒரு பகுதியாக இளம் பெண்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை எப்படிச் சமாளிப்பது என்று கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த ஹர்னாஸ் தங்களை நம்புவது. நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர் என்பதை அறிவது உங்களை அழகாக ஆக்குகிறது. உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள், உலகளவில் நடக்கும் முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசுவோம். வெளியே வா, உனக்காகப் பேசு, ஏனென்றால் நீ உன் வாழ்வின் தலைவன் என மாஸாக கூறியிருந்தார்.
அதோடு நீயே உன் குரல். நான் என்னை நம்பினேன் அதனால்தான் இன்று இங்கு நிற்கிறேன்.” குறைவான பேச்சுக்கும் அதிக செயலுக்கும் அழைப்பு விடுங்கள் என கூறி முதல் 3 இடங்களுக்குள் வந்தார்.
தற்போது ட்ரெண்டில் இருக்கும் ஹர்னாஸ், சமீபத்திய மிகப்பெரிய சிக்கலாக பார்க்கப்படும் ஹிஜாப் அணிவது குறித்து பேசியுள்ளார்.இது தற்போது வைரலாகி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள ஹர்னாஸ்..”ஒரு பெண் ஹிஜாப் அணிந்திருந்தால், அது அவளுடைய விருப்பம். அவள் எப்படி வாழ விரும்புகிறாளோ அப்படி வாழட்டும்.” என துணிச்சலாக பதிவிட்டுள்ளார்.