வீடியோ

20 ஆண்டுக்கு பின் ஆஸி.க்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

கராச்சி: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையே 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. முதலில்பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 41.5ஓவரில் 210 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம்இறங்கிய பாகிஸ்தான் 37.5 ஓவரில் ஒருவிக்கெட் இழப்பிற்கு 214 ரன் எடுத்து 9 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் பாபர் 105, இமாம் உல்ஹக் 89 ரன் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 2-1 என பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது. 20 ஆண்டுக்கு பின் ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *