சென்னை: தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 40க்கு 40 இடங்களை தற்போது பெற்று திமுக சாதனை படைத்துள்ளது. 2004ம் ஆண்டு திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களை கைப்பற்றியது. அப்போது திமுக, தமாகா காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது. அதன்பின்னர், 2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 27 இடங்களிலும், புதுவையிலும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகள் 3 இடங்களில் வென்றன. 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி 37 இடங்களை வென்றது. 3வது அணியாக போட்டியிட்ட பாஜ, பாமக தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் 39 இடங்களை வென்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தற்போது நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 2004ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கூட்டணி மொத்தமாக வெற்றி பெற்றுள்ளது.
40க்கு 40 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் சாதனை
05
Jun