ஆரோக்கியம்

ஆண்களை விட பெண்கள் மன அழுத்ததிற்கு ஆளாவது ஏன்?

Why stress exposures women than menஆண்களை விடவும் இளம்பெண்கள் அதிகமான மன அழுத்ததிற்கு உள்ளாவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.

இதற்கு காரணம், ஆஸ்ட்ரோஜென் என்னும் பாலியல் ஹார்மோன் பெண்களின் மூளையில் ஏற்படுத்தும் மாற்றத்தால், அதிகமான ரத்தம் செலுத்தபட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது.

இதுபோன்ற பாலியல் மாற்றங்கள், இளம்பெண்கள் பருவத்தை எட்டும்போது, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், முரண்மூளை நோய் (schizophrenia), நரம்பியல் குறைபாடுகள், மனநல குறைபாடுகள் போன்ற நோய்கள் ஏற்படுவதாக, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தியோடர் சட்டெர்த்வைத் தெரிவிக்கிறார்.

பொதுவாக, பெண்களுக்கு அதிக அளவில் மனக் கவலையும் மன அழுத்தமும் ஏற்படுக்கின்றன. அதே போல், ஆண்களுக்கு முரண்மூளை நோய் போன்ற மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதாக சட்டெர்த்வைதே தெரிவித்தார்.

இந்த ஆய்விற்காக, 8 வயது முதல் 22 வயது வரை உள்ள இளைஞர்களின் மூளையிலுள்ள ரத்த ஓட்டத்தின் வளர்ச்சியை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் ஆய்வு செய்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வில், தனது சூழ்நிலை மற்றும் உணர்வுகளை கையாளும்போது, பெண் மூளையின் ரத்த ஒட்டம் அதிகரிப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அறிவுத்திறன் சார்ந்த செயல்களில் ஈடுபடும்போது, அச்செயல்கள் சார்ந்து மூளையிலுள்ள பகுதிகளில் ரத்த ஓட்டத்தின் அளவில் அதிகமான வேறுபாடுகள் தெரிவதாக பேராசிரியர் சட்டெர்த்வைதே குறிப்பிட்டார்.

இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பான விரிவான கட்டுரை, நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *