அரசியல், இந்தியா, சட்டம், சிந்தனைக் களம், போராட்டம், விமர்சனம், வீடியோ

“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி!

ஆயோத்தி வழக்கின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வது எனக்கு கடினமாகும் உள்ளது என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ளது.

அந்த தீர்ப்பில், வரலாற்று ஆதாரங்கள் மற்றும் தொல்லியல் துறை ஆய்வுகளின் அடிப்படையில் ராமர் கோயில் கட்ட முழு உரிமை மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக நீதித்துறையில் இருந்தே இந்த தீர்ப்புக்கு விமர்சனம் எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி இந்த தீர்ப்பு குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின் போது அசோக் குமார் கங்குலி கூறியதாவது, “ஆயோத்தி வழக்கின் இந்த தீர்ப்பால் மிகவும் குழம்பியுள்ளேன். ஒரு சட்ட மாணவராக இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வது எனக்கு கடினமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தீர்ப்பின் சாரம்சம் குறித்து பேசிய அவர்,“ அயோத்தியில் 1856 – 1957ல் தொழுகை நடத்தப்படவில்லை என கூறினாலும் நிச்சயம் 1949-ல் அங்கு தொழுகை நடத்திய ஆதராம் உள்ளது. பல ஆண்டுகாலமாக மசூதி இருந்ததை திடீரென இடித்துள்ளனர். பின்னர் அது இந்து அமைப்புகளுக்கு சொந்தம். எனவே அங்கு கோவில் கட்டிடம் கட்டிக்கொள்ள என்று கூறி நீதிமன்றமும் அனுமதித்துள்ளது.

இதன் மூலம் நீதிமன்றத்தை நோக்கி சில கேள்விகள் எழுகிறது. அரசியலமைப்பு சட்டம் வருவதற்கு முன்பு பல நூற்றாண்டுக்கு முன்பு இருந்த நில உரிமை விவகாரத்தில் உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா? இல்லை அரசியல் அமைப்பு வந்தபிறகு மசூதி இருந்ததை தான் நீதிமன்றம் மறுக்கமுடியுமா?” எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் கூறிய ஆவர், “நீதிமன்றத்தால் வரலாற்றை உருவாக்கமுடியாது. அதற்கான கடமையும் நீதிமன்றத்திற்கு இல்லை. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க மட்டுமே முடியும். அதை ப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. அவற்றின் உரிமைகளைப் பாதுக்காக்கவேண்டும். ஐந்து நூற்றாண்டுக்கு முன்பு இருந்தவற்றை ஏன் தெரிந்துக் கொள்ளவேண்டும். மசூதி இருந்ததை நீதிமன்றம் ஒப்புக்கொள்ளகிறது.

ஒருவேலை அது வரலாற்று உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மசூதி இருந்ததை அனைவரும் பார்த்துள்ளார்கள். இடிக்கப்பட்டதையும் பார்த்துள்ளார்கள். இதில் முஸ்லிம்களுக்கு நிலத்தில் உரிமை இல்லை என்றால், மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் அளிக்க அரசுக்கு ஏன் உத்தரவு? அப்படி என்றால் மசூதி இடித்ததை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது தானே அர்த்தம்” என தெரிவித்துள்ளார்.

இறுதியாக பேசிய அவர், “தீர்ப்பு நான் வழங்கியிருந்தால் அந்த நிலத்தில் பள்ளியோ கல்லூரியோ அல்லது மருத்தவமனையோ கட்டவேண்டும் என கூறியிருப்பேன். மேலும் இந்த தீர்ப்பினால் இனி அவர்களால் மசூதிகளை இடிக்கமுடியும். முன்பு அரசின் ஆதரவை மட்டும் பெற்றிருந்தார்கள், இப்போது நீதித்துறையின் ஆதரவையும் பெற்றுள்ளார்கள். இதனால் நான் கலக்கம் அடைந்துள்ளேன்”என்று அவர் கூறியுள்ளார்.

www.bbc.com

பாபர் மசூதி கதை | Babar Masoodi Story

“பாபர் மசூதி இடிப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *