இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், சுற்றுப்புறம், போராட்டம், விமர்சனம்

வரும்.. ஆனா வராது!

நாடு முழுவதும் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் டெல்லியில் நேற்று கையெழுத்தாயின.
இது குறித்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நெடுவாசல் பகுதி மக்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், தமிழகத்துக்கும், தேசத்துக்கும் எதிரான எந்த திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு கண்டிப்பாக முயற்சி எடுக்காது. இந்த திட்டம் குறித்து ஏற்கனவே நெடுவாசல் கிராம மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தினால் விவசாய நிலங்கள் எந்த வகையிலும் பாதிப்பு அடையாது என்று எடுத்துக் கூறப்பட்டு இருக்கிறது.

நெடுவாசல் போராட்ட குழுவினர் மத்திய பெட்ரோலிய துறை மந்திரியை சந்திக்க ஏற்பாடு செய்து, அனைத்து விவரங்களும் எடுத்துரைக்கப்பட்டது. மக்களிடம் ஆலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற உறுதியும் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இப்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது முதல் கட்ட நடவடிக்கைதான். இதற்கு பிறகு மாநில அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாடு தொடர்பான அனுமதியை பெற வேண்டும். மக்களின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைத்த பின்னர்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *