இந்தியா, உலகம், கட்டுரை, சிந்தனைக் களம்

உலக அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடம் பின்தங்கியது ஏன்?

டெல்லி: 2019ம் ஆண்டில் உலக அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கிய நாடுகளுக்கான தரவரிசையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு பின் தங்கி உள்ளதாக தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் தெரிவித்துள்ளது. இந்தியாவில் “சிவில் உரிமைகள்” பாதிக்கப்பட்டதே இத்தகைய வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 167 நாடுகளின் அரசியல் அமைப்புகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு 2019ம் ஆண்டுக்கான பட்டியலை தி இகனாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 2018 இல் 7.23 லிருந்தது. இதில் 2019ல் 6.90 ஆகக் குறைந்தது. இதன் காரணமாக ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் கடந்த 2018ல் 41வது இடத்தில் இருந்த இந்தியா, பத்து இடங்களைக் குறைத்து 51 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயக பின்னடைவின் முதன்மைக் காரணம் நாட்டில் சிவில் உரிமைகள் பாதிக்கப்பட்டது தான் என்கிறது அந்த அமைப்பு.

தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைவாதம்; அரசாங்கத்தின் செயல்பாடு; அரசியல் பங்கேற்பு; அரசியல் கலாச்சாரம்; மற்றும் சிவில் உரிமைகள் ஆகிய ஐந்து அம்சங்களை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளின் ஜனநாயகத்தை தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் ஆராய்ந்து உள்ளது.

குறைபாடு ஜனநாயகம் மேற்கண்ட ஐந்து அம்சங்களின் படி பெற்ற மொத்த மதிப்பெண்ணின் அடிப்படையில், நாடுகள் நான்கு வகையான ஆட்சிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: “முழு ஜனநாயகம்” (8 க்கும் அதிகமான மதிப்பெண்கள்); குறைபாடுள்ள ஜனநாயகம் – 6 க்கும் அதிகமான மதிப்பெண்கள் மற்றும் 8 ஐ விடக் குறைவாக அல்லது சமமாக இருக்கும்; கலப்பின ஆட்சி – மதிப்பெண்கள் 4 ஐ விட அதிகமாகவும், 6 ஐ விட குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கும்; சர்வாதிகார ஆட்சி – மதிப்பெண்கள் 4 ஐ விடக் குறைவாக அல்லது சமமாக இருக்கும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சீனா கடும் சரிவு அதன்படி இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 2018 இல் 7.23 லிருந்தது. இதில் 2019ல் 6.90 ஆகக் குறைந்த காரணத்தால் இந்தியாவில் குறைபாடு உள்ள ஜனநாயக நாடாக உள்ளதாக தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 2019 இன் குறியீட்டில் சீனாவின் மதிப்பெண் 2.26 ஆக சரிந்தது. இதன் காரணமாக சீனா 153 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. “கடந்த ஆண்டு சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, குறிப்பாக வடமேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கில், தீவிரமடைந்துள்ளது. மக்கள்தொகையின் டிஜிட்டல் கண்காணிப்பு 2019 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது, இது தனிப்பட்ட சுதந்திரங்களுக்கு மேலும் தடையை பிரதிபலிக்கிறது” என்று அறிக்கை கூறியுள்ளது.

இலங்கை 69 வளர்ந்து வரும் நாடுகளில், பிரேசில் 6.86 மதிப்பெண்களுடன் 52 வது இடத்திலும், ரஷ்யா 3.11 மதிப்பெண்களுடன் 134 வது இடத்திலும் உள்ளது. இதற்கிடையில், ஒட்டுமொத்த பட்டியலில் பாகிஸ்தான் 4.25 மதிப்பெண்களுடன் 108 வது இடத்தில் உள்ளது, இலங்கை 6.27 மதிப்பெண்களுடன் 69 வது இடத்தில் உள்ளது, வங்கதேசம் 5.88 மதிப்பெண்களுடன் 80 வது இடத்தில் உள்ளது.

ஒட்டுமொத்த பட்டியலில் நார்வே முதலிடத்திலும், ஐஸ்லாந்து மற்றும் சுவீடன் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகளில் நியூசிலாந்து நான்காவது இடத்திலும், பின்லாந்து 5 வது, அயர்லாந்து 6 வது, டென்மார்க் 7 வது, கனடா 8 வது), ஆஸ்திரேலியா 9 வது, மற்றும் சுவிட்சர்லாந்து 10 வது இடத்தையும் பிடித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *