புதுடெல்லி: ஐ.நா. அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு பின்லாந்து என தெரியவந்துள்ளது. குறித்து நடத்திய ஆய்வில் இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது.
ஐ.நா.வுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு (யு.என்.எஸ்.டி. எஸ். என் ) என்ற அமைப்பு 2018ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை ஆன்லை வாயிலாக கடந்த சிலமாதங்களாக நடத்தி வந்தது. அதன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:
உலகம் முழுவதும் 156 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் பின்லாந்து என்ற நாட்டில் தான் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தை தொடர்ந்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. அமெரிக்கா 18-வது இடத்திலும் இந்தியா 133-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 122வது இடத்தில் இருந்த நிலையில்இந்தாண்டு 11 இடங்கள் பின்தங்கியுள்ளது. ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.