உலகில் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த பட்டியலை, ஐ.நா-வின் Sustainable Development Solutions Network வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 155 நாடுகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளன. முதல்முறையாக, இந்தப் பட்டியலில் நார்வே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில், இந்தியா 122-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 118-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு நான்கு இடங்கள் இறங்கி உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு, வருமானம், நம்பிக்கை, சுதந்திரம், பெருந்தன்மை ஆகியவை இந்தியாவின் பின்னடைவுக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, மூன்றாவது இடத்தில் இருந்த அமெரிக்கா, இந்த ஆண்டு வெளியான பட்டியலில் 14-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
முதலிடத்தில் இருந்த அண்டை நாடான டென்மார்க்கை பின்தள்ளி நார்வே முதலிடத்தை பிடித்தது.
உள்ளார்ந்த மகிழ்ச்சியை கணிக்கும் உலக மகிழ்ச்சி அறிக்கை, மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அதற்கு காரணம் என்ன என்று ஆராய்கிறது.
டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் நிலையில், மத்திய ஆஃப்ரிக்க குடியரசு பட்டியலில் இறுதி இடத்தை பிடித்திருக்கிறது.
மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவும், பட்டியலின் உயர்வான இடங்களை பிடிக்க, அமெரிக்காவும் பிரிட்டனும் முறையே 14 மற்றும் 19 -வது இடங்களை பிடித்துள்ளன.
ஆஃப்ரிக்காவில் சஹாராவை ஒட்டியுள்ள நாடுகளும், உள்நாட்டு சண்டை மிகுந்த நாடுகளும் குறைவான மகிழ்ச்சியுடையதாக இருக்கின்றன. 155 நாடுகள் கொண்ட பட்டியலில், சிரியா 152-வது இடத்தையும், ஏமன் மற்றும் தெற்கு சூடான் 146, 147 வது இடத்தையும் பிடித்துள்ளன.
சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டது.
உலகில் மகிழ்ச்சியான – சோகமான நாடுகள்
முதல் 10 மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:
நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன்.
மிகவும் மகிழ்ச்சி குறைவான நாடுகள்
ஏமன், தெற்கு சூடான், லிபியா, கினியா, டோகோ, ரவாண்டா, சிரியா, தான்சானியா, புருண்டி மற்றும் மத்திய ஆஃப்ரிக்க குடியரசு
ஆண்டுதோறும் 150 -க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
“அது பூஜ்ஜியத்தில் இருந்து 10 வரை மேல் நோக்கிச் செல்லும் ஒரு ஏணியை கற்பனை செய்து கொள்ளுங்கள்” என்று கூறி அதன் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இந்தப் பட்டியலில் இந்தியா எந்த நிலையில் இருக்கிறது? கடந்த ஆண்டை விட ஒரு நிலை கீழிறங்கி, இந்தியா 122 -ஆவது இடத்தில் இருக்கிறது. இலங்கை, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் இந்தியாவை விட மகிழ்ச்சி பட்டியலில் நாடுகள் என்று பட்டியலில் இந்தியாவை முந்திவிட்டன.
மகிழ்ச்சியின் அளவு குறைந்து வரும் பட்டியலில், இந்தியா, வெனிசுலா, செளதி அரேபியா, எகிப்து, ஏமன் போட்ஸ்வானா உள்ளிட்ட பத்து நாடுகள் உள்ளன.
இந்தப் பட்டியலில், சோமாலியா 76, சீனா 79, பாகிஸ்தான் 80, இரான் 105, பாலஸ்தீனிய பகுதிகள் 108, பங்களாதேஷ் 110 வது இடத்தையும் பிடிக்க, இந்தியா 122 -வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சியான விசயமாக இல்லை.
அமெரிக்காவிலும் மகிழ்ச்சியின் அளவு குறைந்து வருகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.