ரூ.249, ரூ.299, ரூ.349 என்ற விலையில் மூன்று ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ இலவசமாக ஜியோஃபை சாதனத்தை வழங்குகிறது. இந்த திட்டங்களில் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் பலன்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ அதன் ஜியோஃபை 4ஜி வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் சேவைகளுக்கு மூன்று புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று திட்டங்களும் மாதாந்திர ரீசார்ஜ் திட்டமாகும். இந்த திட்டங்களின் விலை ரூ.249, ரூ.299 மற்றும் ரூ.349 என கிடைக்கிறது. இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தரவு வரம்பை கொண்டிருக்கிறது. அடிப்படை விலையில் கிடைக்கும் ரூ.249 திட்டமானது 30 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. அதேபோல் ரூ.299 திட்டமானது 40 ஜிபி டேட்டாவையும் ரூ.349 ரீசார்ஜ் திட்டமானது 50 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. மூன்று திட்டங்களும் ஒரு மாத வேலிடிட்டியுடன் 18 மாதங்கள் லாக் இன் வேலிடிட்டியை கொண்டிருக்கின்றன.

 

குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள்

 

இந்த திட்டங்களில் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது நிறுவனம் மற்றும் வணிக வாடிக்கையாளர்களை நோக்கமாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் கீழ் வாடிக்கையாளர்கள் போர்ட்டபிள் ஜியோஃபை சாதனத்தை இலவசமாக பெறலாம். இது பயன்பாடு மற்றும் வருவாய் அடிப்படையில் வழங்கப்படும்.

 

மூன்று திட்டங்களும் வெவ்வேறு தரவு வரம்பு

 

ஜியோவின் இணையதளத்தின்படி, புதிய ரூ.249 போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒரு மாத செல்லுபடியுடன் 30 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.299 போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டம் 40 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் ரூ.349 திட்டமானது 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும், டேட்டா உச்சவரம்பு அடைந்த பிறகு இதன் வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

 

ரூ.249, ரூ.299 மற்றும் ரூ.349 ரீசார்ஜ் திட்டங்கள்

 

ரூ.249, ரூ.299 மற்றும் ரூ.349 திட்டமானது ஜியோஃபை போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ஆகும். குறிப்பிட்டபடி, இந்த திட்டங்களில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை கிடைக்காது. ஜியோஃபை 4ஜி வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் ஆனது ஒரு நானோ சிம் ஆதரவைக் கொண்டுள்ளது. இது 150Mbps வேகத்தில் ஐந்து முதல் ஆறு மணிநேரம் வரையிலான இணைய சர்ஃபிங்கை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 10 சாதனங்கள் வரை இணைக்க முடியும். இந்த சாதனம் 2300 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

 

அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்

 

ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஜியோ நிறுவனத்தின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். குறிப்பாக 300 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் நன்மைகளை வழங்குகிறது இந்தஅட்டகாசமான திட்டம்.

 

தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை

 

ஜியோ நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *