இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் முன்பதிவு செய்து ஏராளமான பயணிகள் ரெயில் பயணம் மேற் கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பலர் பயணம் செய்கிறார்கள். அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது. காலியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப இருக்கை வசதி அல்லது படுக்கை வசதி கிடைக்கும்.
மத்திய ரெயில்வே மந்திரி சதானந்தகவுடா தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரெயில்வே இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே தங்களுக்கு விரும்பிய இருக்கை, படுக்கை வசதி, பெட்டி ஆகியவற்றை பயணிகள் தேர்ந்தெடுக் கலாம். பயணி களுக்கு விருப்பமான உணவுகள் ரெயில்களில் வினியோ கிக்கப்படும்.
பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களுக்கு தேவையான உணவு வகைகளை தேர்ந் தெடுத்து குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் உணவு வழங்கப் படும்போது அதற்கான பணம் பெறப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்து வதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் உள்ள மென்பொருளில் புதிய அறிவிப்புகள் அடங்கிய மென்பொருளை இணைத்து ’அப்கிரேட்’ செய்யும் பணி நடந்து வருகிறது. ’இதன்மூலம் நிமிடத்துக்கு 2 ஆயிரம் முதல் 7200 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படும்.
பயணிகளுக்கு தேவை யான உணவுகளை வழங்கு வதற்காக நிறுவனங்களிடம் இருந்து டெண்டர்பெறும் பணியும் நடந்து வருகிறது. ரூ.100 கோடி செலவில் நடைபெறும் இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். ஆகஸ்டு 15-ந்தேதி முதல் இவை அனைத்தும் நடைமுறைக்கு வரும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.