சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத நீடித்த தன்மை கொண்ட பொருட்களுக்கான ‘பசுமை சந்தை’ கண்காட்சி சென்னை பெசன்ட் நகரில் ஞாயிற்றுகிழமை நடை பெற்றது.
உணவு பொருட்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவி க்காத நீடித்த தன்மைக் கொண்ட மூலப் பொருட்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்ட சந்தையே இக்கண்காட்சி யின் சிறப்பம்சம். நகரங்களில் விளைவித்த காய்கறிகள், கீரை வகைகள், இயற்கை உரம் கொண்டு தயாரித்த பழங்கள், உணவு வகைகள், மறு பயன்பாடு செய்யக்கூடிய சானிடரி நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் இந்த சந்தையில் விற்கப்பட்டன.
சென்னை போன்ற நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு அவர்கள் மறந்துவிட்ட பம்பரம், ஆடுபுலி ஆட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக் கொள்ளும் இடமாகவும் இந்த சந்தை அமைந்தது.
தி ஆல்டர்னேடிவ் என்ற இணையதளத்தை நடத்தி வரும் குழு இந்த சந்தையை ஏற்பாடு செய்திருந்தது. இது குறித்து தி ஆல்டர்னேடிவ் -ன் ஆசிரியர் ஆர்த்தி கூறுகையில், “வாழ்க்கைக்குத் தேவையான நீடித்த தன்மைக் கொண்ட பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த சந்தையின் நோக்கம். பெங்களூருவில் கடந்த ஒரு வருடமாக மாதா மாதம் இந்த சந்தையை நடத்தி வந்தோம். சென்னையில் முதல் முறையாக இந்த சந்தை நடக் கிறது. தொடர்ந்து நடத்த திட்ட மிட்டுள்ளோம்,” என்றார்.
கண்காட்சிக்கு வந்திருந்த பூஜா கூறுகையில், “இங்கு குப்பைகளில் எத்தனை ரகங்கள் உள்ளன, அதை தரம் பிரிப்பது எப்படி என்று விளையாட்டின் மூலம் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்பட்டது,” என்றார்.
பெங்களூருவில் ஐடி கம்பெனி நடத்தி வரும் பத்ரிநாத் மற்றும் கிராபிக் டிசைனராக இருக்கும் ஜெயன் வார இறுதி நாட்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இது குறித்து பத்ரிநாத் கூறுகையில், “ எனது பிள்ளைகளுக்கு அவர்கள் சாப்பிடும் தக்காளியும், வெங்கா யமும் எங்கிருந்து வருகிறது என தெரிய வேண்டும்,”என்றார்.
தி இந்து