மதத்தீவிரவாதம் காவியா வெள்ளையா கருப்பா சிவப்பா பச்சையா எந்த வண்ணத்தில் வந்தாலும் அது தீவிரவாதம் தான் மனிதருக்கு இந்த உலகுக்கு எதிரானதுதான், மதத்தீவிரவாதம் அழிந்தால் தான் மனிதர்கள் நலமாக வளமாக வாழ முடியும்.
குறிப்பாக தற்போது இந்தியாவில் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இது உலகமுழுதும் உள்ள முஸ்லிம் நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் அவர்கள் இந்தியாவை புறக்கணிக்க நேர்ந்தால் அங்கு வேலையில் இருக்கும் இந்தியர்களும் பல லட்சம் கோடி ஏற்றுமதி வணிகமும் பாதிக்கப்படும். இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதோடு பொருளாதாரம் படுபாதாளத்திற்கு தள்ளப்படும்.