அரசியல், இலங்கை

இலங்கையில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி.. பெரும்பான்மையை இழந்தது ஆளும் அரசு! ராஜபக்ச பதவி பறிபோகிறது?

கொழும்பு: இலங்கையில் ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இலங்கையில் 40க்கும் மேற்பட்ட ஆளும், கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். 225 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 113 பேர் ஆதரவு தேவைப்படும் நிலையில் 103 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. இலங்கையின் அந்நியச்செலாவணி எதிர்பாராத அளவிற்கு குறைந்து, வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததால் அந்நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் எரிபொருள் இறக்குமதி, அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்முடியாமல் நாடு திண்டாடி வருகிறது. இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் அதிக நேரம் காத்திருந்து எரிபொருள் வாங்க வேண்டியுள்ளது. மக்கள் மின்சாரம், குடிநீர், உணவு, அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. 6 பேர் பலி, 12 பேர் படுகாயம்.. நள்ளிரவில் பரபர சம்பவம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது.

அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மகிந்த ராஜபக்ச இலங்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டனர். இப்படியொரு நெருக்கடியான சூழலில் தேசிய அரசு ஒன்றை அமைக்கப் போவதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருக்கிறார். சுயேச்சை அணிகள் நாடாளுமன்றத்தில் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன், நாடாளுமன்றத்தில் 4 சுயேச்சை அணிகளும் உருவாகியுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரன்ச, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கிய 10 கட்சிகளின் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அநுரபிரியதர்சன யாப்பா அணி ஆகியனவே சுயேச்சையாக செயற்படும் அறிவிப்பை இன்று சபையில் விடுத்தன.

கடும் நெருக்கடி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரன்ச, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கிய 10 கட்சிகளின் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அநுரபிரியதர்சன யாப்பா அணி ஆகியனவே சுயேச்சையாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளன. இதனால் ராஜபக்ச அரசுக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. பெரும்பான்மை இழக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையையும் இழக்கும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆளுங்கட்சியை சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணி பக்கம் அமர்வார்கள் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தகவல் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய அரசை நிறுவுக “நாட்டில் உள்ள தற்போதை அரசு உடனடியாக மாறி நிலையான அரசாங்கத்தை நிறுவவேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எம்.பி. வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், எமது கூட்டணியில் உள்ள 10 அரசியல் கட்சிகளும் அதில் உள்ள 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்பு போலவே தொடர்ந்து சுயாதீனமாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய பிரதமர் புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டில் ஏற்படும் நிலைமைக்கு பொறுப்பு கூறவேண்டி வரும் எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் சுயேச்சை செயல்படபோவதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் இன்று அறிவித்தார்.

அத்துடன், 10 கட்சிகளின் கூட்டணியும் தனித்தே செயற்படும் என விமல் வீரவன்ச தெரிவித்தார். சுசில் பிரேமஜயந்த, அநுரபிரியதர்சன யாப்பா, சுதர்ஷினி, நிமல் லான்சா உட்பட மேலும் சிலரும் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர். கடும் நெருக்கடி இந்த சூழ்நிலையில் இலங்கையில் ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இலங்கையில் 40க்கும் மேற்பட்ட ஆளும், கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். 225 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 113 பேர் ஆதரவு தேவைப்படும் நிலையில் 103 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *