15வது ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 162 ரன்களை துரத்திய கொல்கத்தா அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, பொறுமையாக ஆடிய வெங்கடேச ஐயர் 50 ரன்கள் எடுத்தார். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கம்மின்ஸ் மும்பை பந்துவீச்சை சிதறடித்தார்.
15 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து 16 ஓவரிலேயே அணியை வெற்றிபெற வைத்தார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து கம்மின்ஸ் புதிய சாதனையை படைத்துள்ளார்.