காதி கிராம தொழில் துறை ஆணையம் (கே.வி.ஐ.சி) ஆண்டு தோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதில் மகாத்மா காந்தி படம் பெறுவது வழக்கமாகவுள்ளது. ஆனால் இந்த ஆண்டு காலண்டரில் மகாத்மா காந்திக்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் போடப்பட்டதற்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தனர்
காதி வளர்ச்சியில்
காதி கிராம தொழில் துறை ஆணையம்(கே.வி.ஐ.சி) இந்த 2017ம் ஆண்டிற்கான காலண்டரில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் படத்தை பிரசுரித்துள்ளது. தேசத்தந்தையின் படத்தை நீக்கி விட்டு பிரதமர் மோடியின் படத்தை போடுவதா? என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் செய்தியில் விமர்சித்துள்ளார். காதியின் வளர்ச்சியில் தன்னுடைய பங்கு உள்ளதைப்போல காட்ட பிரதமர் மோடி ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். காதி தேசத்தந்தையின் இதயத்தில் இருந்து உருவான ஆலோசனை ஆகும் இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு தனது முதல் முயற்சியிலேயே மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்தது. ஆனால் தனது ஆட்சியில் அந்த சாதனை நடந்தது என பிரதமர்
மோடி பெருமை
மோடி பெருமை தேடிக்கொள்ள முயலுகிறார். மங்கள் யான் திட்டம் காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதே துவக்கப்பட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதேப்போன்று, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி காதி தொழில் ஆணைய காலண்டரில் காந்திக்கு பதிலாக பிரதமர் மோடி படம் இடம் பெற்றிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காதியும், காந்தியும் பிரிக்க முடியாத விஷயங்கள்.அதில் மகாத்மா காந்திக்கு பதிலாக பிரதமர் மோடி படம் இடம் பெற்றிருப்பதை ஏற்க முடியவில்லை என காதி ஊழியர்களும் தெரிவித்துள்ளனர்.