நியூயார்க் : தெற்காசிய நாடுகளில் குறிப்பாக, இந்தியாவில், தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை அதிகரித்து இருப்பதாக, சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும், போதைப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனையை கண்காணித்து வரும், சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தெற்கு ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துப்
பொருட்களின், கடத்தல் மற்றும் விற்பனை அமோகமாக உள்ளது; இதனால், இந்த நாடுகளை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆப்கன் மற்றும் மியான்மரில் சட்டவிரோதமாக, போதை மருந்துகள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு வழிகளில், இந்திய மருந்து நிறுவனங்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.போதை பொருட்கள் அடங்கிய மருந்துகள், இந்திய மருந்து நிறுவனங்களில் இருந்து, கள்ளத்தனமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள, சட்டவிரோத இணையதள மருந்தகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
தினமலர்