ஆரோக்கியம், தமிழ்நாடு, வர்த்தகம்

வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்

Organic productsஇயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்குத் திரும்பும் போக்கு தற்போது அதிகரித்திருக்கிறது. ஆர்கானிக் உணவு எனப்படும் ரசாயன எச்சங்கள் இல்லாத, இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவு பொருட்கள் மீது கவனம் திரும்பியிருப்பதும் அதன் ஒரு வெளிப்பாடுதான். இந்த ஆர்கானிக் உணவு மூலப்பொருட்களை எங்கே வாங்குவது, எப்படி வாங்குவது என்று ‘பசுமை அங்காடி’ பகுதி வழிகாட்டும். தொடர்புக்கு: uyirmoochu@thehindutamil.co.in

ஆர்கானிக் பொருட்களைத் தொலைபேசி, இணையதளம் வழியாக வாங்க வழி செய்கிறது, சென்னை தி.நகரில் இருக்கும் எஃப் 5 ஸ்டோர் (F5 store).

“பஞ்சப் பூதங்களின் எண்ணிக்கை, புத்துணர்ச்சி (F5- Refresh) ஆகியவற்றைச் சுருக்கமாகக் குறிக்கும் வகையில்தான் எஃப் 5 (F 5) என்ற பெயரை வைத்தோம். ஒரு தொலைபேசி அழைப்பில் வீட்டுக்கே ஆர்கானிக் உணவு பொருட்களைக் கொண்டுவந்து தருகிறோம். ஆன்லைனிலும் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்,” என்கிறார் கடையின் உரிமையாளர் வி.பி. ராஜ்.

அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், நறுமணப் பொருட்கள், ஊறுகாய், பான வகைகள், இனிப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்கள் இங்கே கிடைக்கின்றன.

இயற்கை உணவு முறைக்கு மாறுவதற்கு பெருமளவு மக்கள் விரும்பினாலும் ஆர்கானிக் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது பற்றி கேட்டபோது, “மூன்று ஆண்டுகளில் இயற்கை வேளாண் பொருட்களின் உற்பத்தி ஒரளவுக்குப் பெருகியிருக்கிறது. இதனால், இயல்பாகவே இயற்கை உணவு பொருட்களின் விலையும் குறைந்திருக்க வேண்டும். எஃப் 5-ல் கிடைக்கும் எல்லா ஆர்கானிக் உணவு பொருட்களின் விலையையும் குறைவாகவே நிர்ணயித்திருக்கிறோம். இயற்கை விவசாய முறைகளையும் உடல் ஆரோக்கியத்தையும் மீட்கும் முயற்சியில் சிறு பங்களிப்பாக இதைச் செய்துவருகிறோம்.” என்கிறார் ராஜ்.

சென்னையில் அடுத்த கட்டமாக நடமாடும் அங்காடியை (Mobile Shop) விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது எஃப் 5 ஸ்டோர் .

தொலைபேசியில் ஆர்கானிக் பொருட்கள் ஆர்டர் கொடுக்க – 9677 282828 / 74184 74184 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு: www.f5store.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *