தமிழ்நாடு, வர்த்தகம்

துபாய் உலக கண்காட்சியில் தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில், தமிழ்நாட்டின் அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்றார். இந்திய அரங்கை பார்வையிட்ட அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு தளத்தை திறந்து வைத்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அரங்கு அமைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

இந்த அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ்வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப்பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் தொடர்ச்சியாக காட்சிப் படங்கள் திரையிடப்படுகின்றன.

அந்த அரங்கின் முகப்பில் ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற இலச்சினை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அரங்கை திறந்து வைத்த பிறகு கண்காட்சியில் தமிழ்நாடு வாரக் கொண்டாட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *