அரசியல், கார்டூன், தமிழ்நாடு, தேர்தல், விமர்சனம்

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ – ரஜினிகாந்த்

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் .

இமயமலை, தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், 15 நாட்கள் கழித்து சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் டேராடூனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினிகாந்த், “நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை . இன்னும் கட்சிப் பெயரை அறிவிக்கவில்லை . எனவே, அரசியல் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை .

ஆன்மிக பயணத்திற்காகவே இமயமலை வந்துள்ளேன். இது அரசியல் பயணம் கிடையாது. அமிதாப் பச்சன் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்“ எனத் தெரிவித்துள்ளார் .

-www.tamil.thehindu.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *