இந்தியா, பயங்கரவாதம், போராட்டம், விமர்சனம்

ஆஷிபா படுகொலையும் இந்துத்துவா சக்திகளும்

இந்தியாவில் 8 வயது சிறுமியை போலீஸ்காரர் உட்பட எட்டுபேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஆஷிபா கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனாள், அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து சிறுமியின் உடல் வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சிறுமி ஆஷிபாவை, கோவில் ஒன்றில் மறைத்து வைத்து பலமுறை கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

பல நாட்களாக அந்த சிறுமிக்கு உணவு கூட கொடுக்காமல் மயக்கத்தில் வைத்தே இந்த கொடூர சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர்.

சிறுமி மயக்க நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்திய மருந்தால் சிறுமியின் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது.

முதலில் கடத்திசென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 18 வயதுக்குட்பட்ட சிறுவனுடன் சேர்ந்து மேலும் 6 பேரும், விசாரணை நடத்தச்சென்ற காவல் அதிகாரி ஒருவரும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இதுதொடர்பாக 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர், இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதான 9 பேரில் காஷ்மீரில் பாஜ அரசியல் புள்ளி ஒருவரின் மகன், காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் ஒருவன் எனபது தெரியவந்தது. முதல்வர் மெபூபா முப்தி சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்திட உத்தரவிட்டார்.

சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு கண்டனம் தெரிவித்தும், காஷ்மீரில் வழக்கறிஞர்கள சங்கத்தினர், வர்த்தக அமைப்பினர், மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தை துவக்கினர்.

இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்களும், இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பினர்களும் கத்துவாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரும் இந்த கொடூர சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

சிறுமி ஆஷிபாவின் கொலை சம்பவம் பற்றி நாடே கொந்தளித்துவரும் நிலையில், ஆஷிபாவின் கொலை சரியான ஒன்று என்று கோடக் மஹிந்திரா வங்கியின் துணை மேலாளரின் ட்விட்டர் பதிவு, சமூகவலைதளங்களில் பெரும் எதிர்ப்பை பெற்று வருகிறது.

கேரளாவை சேர்ந்த விஷ்ணு நந்தகுமார், கேரளாவில் உள்ள கோடக் மஹிந்திரா வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஆஷிபாவின் கொலை சம்பவம் குறித்து அறிந்த அவர், சிறுமி ஆஷிபா இந்த வயதிலேயே கொல்லப்பட்டது சரி என்றும், அவ்வாறு கொல்லப்படவில்லை என்றால் வளர்ந்தபின் தற்கொலை செய்துகொண்டு, இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவாள் என்றும் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவை பார்த்த பலர், அவருடைய பதிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், கோடக் மஹிந்திரா வங்கியின் முகநூல் பக்கத்தில் போடப்பட்டிருந்த கடைசி பதிவில், அந்த துணை மேலாளரை பணி நீக்கம் செய்யுமாறு 34 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், ஆர்.எஸ்.எஸ் சீறுடை அணிந்தவாறு இருக்கும் அவரது புகைப்படங்களையும் பரப்பி வருகின்றனர்.

ஆஷிபா கொலையாளிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் பாஜகவினர்

இதில் தொடர்புடைய எல்லோரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இந்த விஷயம் காரணமாக பாஜக கட்சியை சேர்ந்த சிலர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

அதேபோல் குற்றவாளிக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில், ஜம்முவின் பாஜக மாநில அமைச்சர்கள், லால் சிங், சந்திர பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இது பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கியது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக அமைச்சர்களே இப்படி ஊர்வலம் நடத்தலாமா என்று கேள்வி எழுந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த அமைச்சர்கள் பதவி விலகி இருக்கிறார். இருவரும் தாமாக முன்வந்து பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளதாக பாஜக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை உலுக்கிய கற்பழிப்பு சம்பவத்திற்கு பாஜக துணைபோவது போல இருக்கின்றது என சர்ச்சை வெடிகின்றது .அதாவது நரேந்திர மோடியின் ஆட்சிக்கு பெரும் சரிவு வரும் என்பதற்காவே இந்த சிறுமியின் கொலையை ஒரு பொருட்டாக எண்ணாமல் பாஜக வினர் கொலையாளிகளுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *