நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.