பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் இந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்ட போஸ்ட்களில் மத்திய அரசை குறித்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. பேரிடர் காலங்களில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக #GoBackModi என்ற பதிவின் கீழ் புகார்கள் கூறப்படுகின்றன.  அதிக பதிவுகள் செய்யப்படுகிறது.

கஜா புயலின்போது 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். 11 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஆனால் கஜா புயல் நிவாரண பணியின்போது தமிழகம் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதள பதிவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பெரும்பாலான பதிவுகளில் தமிழ்நாட்டின் வரைபடம் பெரியாரின் முகத்துடன் கூடியதாக இருப்பது போன்றும், அவர் Go Back Modi என்று சொல்வதைப் போன்றதுமான கார்ட்டுன் அதிகம் இருக்கின்றன.

இதேபோன்று பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போஸ்ட் செய்து வருகின்றனர். #MaduraiThanksModi மற்றும் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக்குகளில் மோடியை வரவேற்கும் போஸ்ட்கள் செய்யப்படுகின்றன. இங்கு நாம் குறிப்பிட்ட 3 ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளன.

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், காவிரி விவகாரத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, கர்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்டவற்றால் மத்திய அரசு மீது தமிழகத்தில் எதிர்ப்பு காணப்படுகிறது.

 

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *