இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிவிட முடியும் என நரேந்திர மோடி நம்பிக்கையுடன் உள்ளார். அவ்வாறு மீண்டும் பிரதமரானால், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தைப் போல அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையில் பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியிலான சீர்திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

tamil.thehindu.com

 

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *