பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 16 நாள் உயர்வுக்குப் பிறகு இந்தியன் ஆயில் நிறுவனம் புதன்கிழமை 1 பைசா குறைத்தது. அதனைத் தொடர்ந்து சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் வியாழக்கிழமை பெட்ரோல் 7 பைசாவும், டீசல் 5 பைசாவும் இந்தியன் ஆயில் நிறுவனம் குறைத்துள்ளது. இதனால் இன்று காலை 6 மணி முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 81.35 ரூபாய் எனவும் ஒரு லிட்டர் டீசல் 73.12 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்) சென்னை: 81.35 ரூபாய் (நேற்றை விலை 81.42 ரூபாய்) டெல்லி: 78.35 ரூபாய் (நேற்றை விலை 78.42 ரூபாய்) கொல்கத்தா: 80.98 ரூபாய் (நேற்றை விலை 81.05 ரூபாய்) மும்பை: 86.16 ரூபாய் (நேற்றை விலை 86.23 ரூபாய்)
இன்றைய டீசல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்) சென்னை: 73.12 ரூபாய் (நேற்றை விலை 73.17 ரூபாய்) டெல்லி: 69.25 ரூபாய் (நேற்றை விலை 69.30 ரூபாய்) கொல்கத்தா: 71.80 ரூபாய் (நேற்றை விலை 71.85 ரூபாய்) மும்பை: 73.73 ரூபாய் (நேற்றை விலை 73.78 ரூபாய்)
சர்வதேச சந்தை சர்வதேச சந்தையில் கடந்த மூன்று நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை சரிந்து இருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.11 புள்ளிகள் என 2.72 சதவீதம் உயர்ந்து 77.50 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. WTI கச்சா எண்ணெய் 2.17 சதவீதம் விலை உயர்ந்து 68.21 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது
மீண்டும் உயர வாய்ப்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.