கடந்த 20ம் தேதி மதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியதன் அடிப்படையில் வைகோ மகன் துரை வையாபுரி தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேசியதாவது: ஜனநாயக முறைப்படி துரை வையாபுரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் எந்தவிதமான ஒளிவு மறைவும் கிடையாது. 106 பேர் வாக்களித்து அதில் 104 பேர் துரை வைகோ அவர்களை செயலாளராக வரவேண்டுமென தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தான் இவர் செயலாளராக ஜனநாயக முறைப்படி பதவி ஏற்றார். என் மகன் என்பதற்காக நான் திணிக்கவும் இல்லை.